Published Date: February 8, 2024
CATEGORY: EVENTS & CONFERENCES

சென்னை அண்ணா சாலை செங்கல்வராயன் நாயக்கர் மாளிகையில் நேற்று முன்தினம் (06.02.2024) தமிழக தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கத்தினர் மற்றும் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண்மை இயக்குனர் அ. ஜான் லூயிஸ் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர் மற்றும் தொழிலாளர் நல வாரிய தலைவர் ஜோ. ஜீவா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Media: Murasoli